Tuesday, July 17, 2012

தீப ஒளி காமராஜ்


விருதையின் விடிவெள்ளியே...
எங்கள்
தென்னாட்டு காந்தியே....
நின் தொலைநோக்கு பார்வையின்
உதயமே,
இன்று நாங்கள் காணும்
உலகம்...
" படிக்காத மேதை"  இது
உன் அடைமொழி....
இதில் சற்று முரண் உண்டு
எனக்கு....
மனிதனை படித்தாய்,
மனிதநேயத்தையும் படித்தாய்....
அரசியலை படித்தாய்,
அதன்மூலம்
அகிலத்தையும் படித்தாய்....
ஆதலால்
நீயும் ஒரு படித்த மேதையன்றோ...!
ஏட்டறிவு பெற்றவனும்
வியக்கும்
ஏகலைவன் நீ....
மனிதத்தின் மகுடம்
நீ....
அரசியலின் அர்த்தம்
நீ...
நேர்மையின் நேர்காணல்
நீ...
கல்வியின் கண்இமை
நீ...
கர்மமே கண்ணாக எண்ணிய
கர்மவீரனே....
நீ பிறந்த இம்மண்ணில்
நானும் பிறந்ததை
எண்ணி
வணங்குகிறேன் உன்னை
பெருமிதத்தோடு.... 

No comments: