Monday, August 6, 2012

நட்புக்காக ஒரு கவிதை

காதல் கவிதை மட்டுமே 
எழுதி பழகிய என்னிடம் 
என் நண்பன் கேட்டான், 
நம் 
நட்புக்காக ஒரு கவிதை 
எழுது என்று.....
நான் எழுதினேன் 
என் நண்பனுக்காக 
ஒரு கவிதை, 
ஒரு வார்த்தையில்....
"நட்பு". 

Wednesday, July 25, 2012

வரம்கொடு எனக்கு


உன்  வகுப்பறை
மாணவனாக  இருக்க 
வரம்கொடு  எனக்கு ....
நீ  நடத்தும்  
பாடம்  கேட்க்க 
அல்ல .... 
ஒளி  வீசும்  
உன்  முகத்தை 
தினம்  தினம் 
பார்க்க ... 

Friday, July 20, 2012

ஞாபகம்


நீ 
வாழ்ந்த ஊரை 
நான் 
கடக்கும்பொழுது
உன்னோடு வாழ்ந்த 
சிலநொடி 
ஞாபகங்கள்... 

பேராண்மை


வள்ளுவனின் 
பேராண்மை கூட 
நான் முரணாக 
நினைத்ததுண்டு....
என் காதலியை 
இன்னொருவன் 
மனைவியாக்கிய 
பின்பு....  

உவமை


கார்மேகம் வண்ணம் 
உன் கூந்தல் 
என்றேன்...
நிலவின் வடிவம் 
உன் முகம் 
என்றேன்...
மல்லிகையின் வெண்மை 
உன் மனம் 
என்றேன்...
வானவில்லின் வளைவு 
உன் இடை 
என்றேன்... 
தாமரையின் மொட்டுக்கள் 
உன் பாதம் 
என்றேன்...
பூவின் மென்மை
உன் தேகம் 
என்றேன்...
இன்று...
நீ  என்னவள் 
இல்லை...
இருந்தும் இவையெல்லாம் 
உவமையாக தொடர்கிறேன் 
என் அடுத்த 
காதலிக்கு..... 

இளம் விதவை


நிறமுள்ள பூவெல்லாம் 
மனம் 
வீசுவதில்லை....
இங்கே 
மனமுள்ள பூவொன்றுக்கு 
நிறமில்ல...
ஆம்..!
வாசனை பூக்களில் 
இவளும் ஒருவள் 
இவளுக்கு 
மனம் உண்டு 
ஆனால் 
நிறமில்லை...

மரம் பேசுகிறது


மனிதா...!
பறவைகளின் சரணாலயம் 
என்னில்....
பாவங்களின் சாக்கடை 
உன்னில்...
மனிதனின் சுவாசம் 
என்னில்...
மண்ணின் பேராசை 
உன்னில்...
நிழல்களின் கூடாரம் 
என்னில்...
நிலையற்ற மனம் 
உன்னில்...
வேர்களின் ஊடுருவல் 
என்னில்...
வேதனையின் சங்கமம் 
உன்னில்...
ஆகவே மனிதா...!
என் ஒருவனை 
வெட்டும் முன் 
ஓராயிரம் மரங்களை 
நடு...
இதுவே 
உன் குறைந்தபட்ச்ச 
பரிகாரம்....