Wednesday, July 25, 2012

வரம்கொடு எனக்கு


உன்  வகுப்பறை
மாணவனாக  இருக்க 
வரம்கொடு  எனக்கு ....
நீ  நடத்தும்  
பாடம்  கேட்க்க 
அல்ல .... 
ஒளி  வீசும்  
உன்  முகத்தை 
தினம்  தினம் 
பார்க்க ... 

Friday, July 20, 2012

ஞாபகம்


நீ 
வாழ்ந்த ஊரை 
நான் 
கடக்கும்பொழுது
உன்னோடு வாழ்ந்த 
சிலநொடி 
ஞாபகங்கள்... 

பேராண்மை


வள்ளுவனின் 
பேராண்மை கூட 
நான் முரணாக 
நினைத்ததுண்டு....
என் காதலியை 
இன்னொருவன் 
மனைவியாக்கிய 
பின்பு....  

உவமை


கார்மேகம் வண்ணம் 
உன் கூந்தல் 
என்றேன்...
நிலவின் வடிவம் 
உன் முகம் 
என்றேன்...
மல்லிகையின் வெண்மை 
உன் மனம் 
என்றேன்...
வானவில்லின் வளைவு 
உன் இடை 
என்றேன்... 
தாமரையின் மொட்டுக்கள் 
உன் பாதம் 
என்றேன்...
பூவின் மென்மை
உன் தேகம் 
என்றேன்...
இன்று...
நீ  என்னவள் 
இல்லை...
இருந்தும் இவையெல்லாம் 
உவமையாக தொடர்கிறேன் 
என் அடுத்த 
காதலிக்கு..... 

இளம் விதவை


நிறமுள்ள பூவெல்லாம் 
மனம் 
வீசுவதில்லை....
இங்கே 
மனமுள்ள பூவொன்றுக்கு 
நிறமில்ல...
ஆம்..!
வாசனை பூக்களில் 
இவளும் ஒருவள் 
இவளுக்கு 
மனம் உண்டு 
ஆனால் 
நிறமில்லை...

மரம் பேசுகிறது


மனிதா...!
பறவைகளின் சரணாலயம் 
என்னில்....
பாவங்களின் சாக்கடை 
உன்னில்...
மனிதனின் சுவாசம் 
என்னில்...
மண்ணின் பேராசை 
உன்னில்...
நிழல்களின் கூடாரம் 
என்னில்...
நிலையற்ற மனம் 
உன்னில்...
வேர்களின் ஊடுருவல் 
என்னில்...
வேதனையின் சங்கமம் 
உன்னில்...
ஆகவே மனிதா...!
என் ஒருவனை 
வெட்டும் முன் 
ஓராயிரம் மரங்களை 
நடு...
இதுவே 
உன் குறைந்தபட்ச்ச 
பரிகாரம்....

Wednesday, July 18, 2012

ஆசிரியர் வாழ்த்து


ஏட்டினிலே படித்ததுண்டு 
கடவுள் வாழ்த்து
எங்காவது படித்ததுண்டா
ஆசிரியர் வாழ்த்து...
படைத்தலும் காத்தலும்
இறைதொழில் என்றால்
அவை இன்னதென்று
கற்பித்தவர் ஆசிரியரன்றோ....!
நிலவையே பொம்மையாக்கி
பசியாற்றும் அன்னையரே
அந்நிலவினிலே உட்பொருளை
உணர்த்தியவர்
உமக்கும் நிகரன்றோ....!
கற்க கசடற
வள்ளுவன்  வாக்கு
அக்கற்றலையும் கற்பித்தவர்
ஆசிரியரன்றோ....!
அறிவும் தெளிவும்
மானுடத்தின் சிகரமாம்
அவ்விரண்டையும் உணர்த்தியவர்
ஆசிரியரெனும் படிகளன்றோ....!
ஆதலால்
துதிக்கின்றேன் உம்மை
ஆசிரியரே..... 




Tuesday, July 17, 2012

தீப ஒளி காமராஜ்


விருதையின் விடிவெள்ளியே...
எங்கள்
தென்னாட்டு காந்தியே....
நின் தொலைநோக்கு பார்வையின்
உதயமே,
இன்று நாங்கள் காணும்
உலகம்...
" படிக்காத மேதை"  இது
உன் அடைமொழி....
இதில் சற்று முரண் உண்டு
எனக்கு....
மனிதனை படித்தாய்,
மனிதநேயத்தையும் படித்தாய்....
அரசியலை படித்தாய்,
அதன்மூலம்
அகிலத்தையும் படித்தாய்....
ஆதலால்
நீயும் ஒரு படித்த மேதையன்றோ...!
ஏட்டறிவு பெற்றவனும்
வியக்கும்
ஏகலைவன் நீ....
மனிதத்தின் மகுடம்
நீ....
அரசியலின் அர்த்தம்
நீ...
நேர்மையின் நேர்காணல்
நீ...
கல்வியின் கண்இமை
நீ...
கர்மமே கண்ணாக எண்ணிய
கர்மவீரனே....
நீ பிறந்த இம்மண்ணில்
நானும் பிறந்ததை
எண்ணி
வணங்குகிறேன் உன்னை
பெருமிதத்தோடு....