Sunday, August 15, 2010

முதல் காதல்...


கலைந்த என் தலைமுடியை
சீவியபோது.....
தெரியாது  எனக்கு..
இனி கலையபோவது
மனது என்று...

Friday, August 13, 2010

அன்புள்ள அம்மா...


ஈரைந்து மாதத்திலே
பெற்றெடுத்த அன்னையே....
விண்ணை விட  மேலாக 
எண்ணுகிறேன் உன்னையே.... 
உன்னைவிட பாசத்த
காட்ட இங்க யாருமில்ல....
நீ கொடுத்த நிலாசோறு
சுவைகூட மாறல....
நா வாழும் நகரத்தில
பசிகூட எடுப்பதில்ல....
உன்மடியில தூங்கத்தான்
தினம் தினம் ஏங்குறேன்...
நானும் இங்க தூங்கத்தான்
பாக்குறேன் முடியல....
நீ படிச்ச பாட்டெல்லாம்
தாலாட்டு போலதானே...
நானும் இங்க படிக்குறேன்
என்னானுதான்  புரியல....
நீ காட்டின அன்புல
கரைந்துதான் போனேன்னம்மா....
நானும் இங்க கரையத்தான்
அன்புதான் இல்லையம்மா....
நீ காட்டின உலகத்த
பார்த்துதான் வளர்ந்தேனே....
நா பாக்குற உலகம் இங்க
மாறித்தான் போயிட்டுதே....
ஊரெல்லாம் தெய்வத்த
தேடுறாங்க கோவிலிலே....
உன்னையே தினம்தினம்
கும்பிடுறேன் தெய்வமா.... 

என்னவளின் பிறந்தநாள்...


தேவர்களும் வியந்து பார்க்கும்
தேவதையே...!
உன் மலர்க்கரம் பட்டுத்தான்
பூக்களும் மலர்கின்றன....
உன் இதழ் சிந்தும் சிரிப்பில்தான்
கதிரவனும் குளிர்கிறான்....
உன் முகம் காட்டும் ஒளியில்தான்
மதியும் வெண்மதியாகிறான்...
என்னவளே...!
நீ பிறந்த இந்நாளுக்காகத்தான்
நாட்களும் தவமிருக்கிறது......

Wednesday, August 11, 2010

உங்களுக்காக....

இனியவனின் இனிமையான வரிகள் உங்களுக்காக.......